Pixel கேமரா மூலம் எந்தவொரு தருணத்தையும் தவறவிட மாட்டீர்கள்! போர்ட்ரெய்ட், இரவு ஒளி, டைம் லாப்ஸ், சினிமேட்டிக் பிளர் போன்ற அம்சங்களைப் பயன்படுத்தி அற்புதமான படங்களையும் வீடியோக்களையும் எடுக்கலாம்.
பிரமிப்பூட்டும் படங்களை எடுக்கலாம்
• எக்ஸ்போஷர் மற்றும் ஒயிட் பேலன்ஸ் கட்டுப்பாடுகளுடன் கூடிய HDR+ - குறைந்த வெளிச்சமுள்ள அல்லது பின்னணியில் அதிக வெளிச்சமுள்ள தருணங்களில் HDR+ மூலம் வியப்பூட்டும் படங்களை எடுக்கலாம்.
• இரவு ஒளி - இனி ஃபிளாஷைப் பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது. இருளில் தெரியாமல் இருக்கக்கூடிய அனைத்து விவரங்களையும் வண்ணங்களையும் இரவு ஒளி மூலம் படமெடுக்கலாம். ஆஸ்ட்ரோஃபோட்டோகிராஃபி மூலம் பால்வெளி அண்டத்தையும் நீங்கள் படமெடுக்கலாம்!
• கேமரா குரு - சிறப்பாகப் படமெடுக்க Gemini மாடல்களின் பரிந்துரைகளையும் வழிகாட்டுதலையும் பெறலாம்
• ஆட்டோமேட்டிக் சிறந்த ஃபோட்டோ - ஒரே முறை ஷட்டர் பட்டனை அழுத்தி நண்பர்களின் சிறந்த தருணங்களைப் படமெடுக்கலாம்
• சூப்பர் ரெஸ் ஜூம் - தொலைதூரத்தில் இருப்பவற்றையும் படமெடுக்கலாம். சூப்பர் ரெஸ் ஜூம் அம்சத்தின் மூலம் ஜூம் இன் செய்யும்போது படம் இன்னும் தெளிவாகத் தெரியும்.
• புரோ ரெஸ் ஜூம் - மேம்பட்ட ஜெனரேட்டிவ் பட மாடல் மூலம் 100x வரை ஜூம் செய்யலாம்
• சேர்ந்து ஃபோட்டோ எடுங்கள் - மொத்தக் குழுவையும் ஒரே படமாக எடுக்கலாம், படமெடுப்பவரையும் அதில் சேர்க்கலாம்
• நீண்டநேர எக்ஸ்போஷர் - காட்சியிலுள்ள நகரும் பொருட்களைக் கிரியேட்டிவாக மங்கலாக்கலாம்
• ஆக்ஷன் பேன் - சப்ஜெக்ட்டை ஃபோகஸில் வைத்துக்கொண்டு பின்புலத்தைக் கிரியேட்டிவாக மங்கலாக்கலாம்
• மேக்ரோ ஃபோகஸ் - மிகச் சிறிய சப்ஜெக்ட்டுகளிலும் அடர்த்தியான வண்ணத்தையும் சிறந்த ஒளி மாறுபாட்டையும் பெறலாம்
• நிபுணர் அம்சங்கள் - ஷட்டர் வேகம், ISO போன்ற பல மேம்பட்ட கேமரா அமைப்புகளைப் பெறலாம்
ஒவ்வொரு முறையும் அட்டகாசமாக வீடியோ எடுங்கள்
• வீடியோ பூஸ்ட் - கிளவுடில் AI செயலாக்கத்தின் மூலம் மிக உயர்தர வீடியோக்களைப் பெறலாம்
• இரவு ஒளி வீடியோ - சிறந்த தருணத்தை இருட்டிலும் கச்சிதமாக வீடியோ எடுக்கலாம்
• கூட்ட நெரிசல் உள்ள இடங்களிலும் தெளிவான ஆடியோவுடனும் சிறந்த தெளிவுத்திறனுடனும் அதிக ஒப்புமை கொண்ட தத்ரூபமான வீடியோக்களை ரெக்கார்டு செய்யலாம்
• சினிமேட்டிக் பிளர் - சப்ஜெக்ட்டின் பின்புலத்தை மங்கலாக்குவதன் மூலம் சினிமேட்டிக் எஃபெக்ட்டை உருவாக்கலாம்
• சினிமா கேமரா - மொபைலின் நகரும் அசைவுகளைக் குறைக்கலாம்
• நீண்ட ஷாட் - இயல்பான பட மோடில் இருக்கும்போது ஷட்டர் பட்டனை அழுத்திப் பிடிப்பதன் மூலம் கேஷுவலான, விரைவான வீடியோக்களை எடுக்கலாம்
தேவைகள் - Pixel கேமராவின் சமீபத்திய பதிப்பு Android 16 அல்லது அதற்குப் பிந்தைய பதிப்புகளைக் கொண்ட Pixel சாதனங்களில் மட்டுமே இயங்கும். Pixel ஃபோன்களுடன் இணைக்கப்பட்ட Wear OS 5.1 (மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளைக் கொண்ட) சாதனங்களில் மட்டுமே Wear OSஸுக்கான Pixel கேமராவின் சமீபத்திய பதிப்பு இயங்கும். சில அம்சங்கள் சில சாதனங்களில் கிடைக்காது.
புதுப்பிக்கப்பட்டது:
30 அக்., 2025